🕘 09.00 to 18.00, Monday to Saturday 📍 Redhills, Chennai - 600052
📞 +91 63825 09489 ✉️ info@raveendraswamigal.com.in
📜

பொய்யான அன்பு

His Words · Tuesday, 16 April 2024

Home  ›  News  ›  Post

பொழுதுபோக்கான பேச்சு தேவைப்படும் போது தேடல் இது தான் இங்கே பலரது வாழ்க்கையாக மாறிவிட்டது பொழுதுபோக்கான பேச்சு தேவைப்படும் போது தேடல் இது தான் இங்கே பலரது வாழ்க்கையாக மாறிவிட்டது . இந்த உலகில் அன்பானவர்களை விட அன்பு செய்வது போல் நடிப்பவர்கள் தான் அதிகம், தேவைக்கு மட்டும் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர் போன்ற பொய்யான உலகம் இது. அன்பை கொடுத்து ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி புரியும்.

எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்… இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..! கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது! அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!

போலியான உறவுகளுடன் பொய்யாக வாழ்வதை விட , தனிமையே சிறந்தது “உங்கள் கெட்ட நேரத்தில் உங்களுடன் நிற்கும் நண்பர்களை மதியுங்கள், உங்கள் கெட்ட நேரத்தில் உங்களை விட்டு வெளியேறுபவர்களிடமிருந்து விலகி இருங்கள்” தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது தேவைக்காக பேசவும் தெரியாது. மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்… மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்…! அளவு என்பது உப்புக்கு மட்டும் அல்ல சில உறவுகளும் தான்.

கூடினாலும் குறைந்தாலும் கடைசியில் குப்பையில்தான். யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை காலம் காட்டும் என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும், தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது. சில மனிதர்களும் அப்படித்தான்.

பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்! உங்கள் பலவீனங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்களுக்கு எதிராக யார் அவற்றைப் பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது இன்று பழகுவார், நாளை விலகுவர் உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்! பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று… சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!

பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்!

📞 Call Now 💬 WhatsApp
💬 📞